அறிகுறிகள்

காய்ச்சல், சோர்வு மற்றும் வறட்டு இருமல் ஆகியன COVID-19 இன் பொதுவான அறிகுறிகளாகும். இவை ஆரம்பத்தில் மிதமாக தொடங்கி படிப்படியாக கூடும். 2 - 14 நாட்களுக்குள்ளாக அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும் சராசரியாக வைரஸ் பாதிப்பு உண்டாகி 5 நாட்களுக்குப்பிறகு இவை தென்படும்.

சில அறிகுறிகள் எல்லோருக்கும் தென்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தென்பட்ட அறிகுறிகள், COVID-19 இன் பொதுவான அறிகுறிகளென கீழே கொடுக்கப்பட்டுள்ளன,

  • காய்ச்சல்

  • வறட்டு இருமல்

  • சோர்வு

  • மார்பு சளி

  • மூச்சு விடுவதில் சிரமம்

  • தசை வலி அல்லது மூட்டு வலி

  • தொண்டை வலி

பெரும்பாலான அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் சளியுடன் ஒத்துப்போகின்றன. அரிதாக COVID-19 மூக்கு ஒழுகுதலை உண்டாக்கும்.

Last updated