பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போது அல்லது இருமும்போது, அவரின் மூக்கு அல்லது வாயிலிருந்து வரும் சிறு துளிகளால் வைரஸ் பரவுகிறது. இந்த நீர்த்துளிகள் மூலத்திலிருந்து 1 மீட்டருக்கு மேல் பயணிக்கக்கூடும், மேலும் அவை பொருள்கள் மற்றும் பரப்புகளில் தங்கிவிடும் . பரப்பின்மேல் படர்ந்துள்ள வைரஹின் மேற்பரப்பைத் தொட்டு, பின்னர் அவர்கள் தங்கள் கண், வாய் அல்லது மூக்கைத் தொடும் போது வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு இடையிலான தூரம் ஒரு மீட்டருக்கும் குறைவாக இருந்தால் இந்த துளிகளை மற்றொருவர் உள்ளிழுப்பதன் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படலாம்.